Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை பயன்படுத்த கூடாது…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு…. உரிமையாளர்களுக்கு அபராதம்…!!

பாலீதின் பொருட்களை அதிகாரிகள் பரிந்துரை செய்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சிக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் நகராட்சி ஆணையரான குமரிமன்னன் தலைமையில் பெரம்பலூரிலுள்ள கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அந்த ஆய்வில் 6 கடைகளிலிருந்து 600 கிலோ பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து ரூபாய் 14 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அந்த தொகை அதிகாரிகளால் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |