கிரீஸ் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டின் கைத்திரா தீவிலிருந்து, தென்மேற்கு பகுதியில் சுமார் 18 மைல்கள் தூரத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் உருவானது. இது 5.2 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக ஏதென்ஸ் பல்கலைகழகத்தின் நிலநடுக்கவியல் மையம் கூறியிருக்கிறது.
சுமார் 18.6 மைல்கள் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் பாதிப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகவில்லை.