பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் பகுதியில் ராஜா-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மகாலட்சுமி தனது வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்பது போல் அங்கு சென்றுள்ளார். அதன்பின் சற்றும் எதிர்பாராத சமயத்தில் அந்த மர்ம நபர் மகாலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து மகாலட்சுமி அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.