Categories
தேசிய செய்திகள்

தனது பள்ளி முதல்வருக்கு…. கேப்டன் வருண் சிங்கின் உருக்கமான கடிதம்….!!!!

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட வருண் சிங், பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இவர் சவுரிய சக்ரா விருதை பெற்றவர். தனது பள்ளி முதல்வருக்கு உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அது இளம் தலைமுறையினருக்கு பாடமாக அமைந்துள்ளது. அவர் அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தார் என்றால் “எல்லோரும் பள்ளியில் சிறந்து விளங்க மாட்டார்கள். நான் சாதாரணமானவனாகவே இருந்தேன் . இன்று என் வாழ்க்கையில் கடினமான மைல் கல்லை எட்டி உள்ளேன்.

நான் ஆசிரியர்களை மிக உயர்ந்த மதிப்பில் வைத்துள்ளேன். என் வாழ்வில் உயர்ந்து இருக்கிறேன். எந்த வேலை செய்தாலும் அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று கூறியிருந்தார். தன் வாழ்வில் சிறந்து விளங்கிய நேரத்தில் அவர் தன் பள்ளி ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தது, இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

Categories

Tech |