Categories
உலக செய்திகள்

மக்களே…! 3 நாட்கள் செல்போன் சேவைகள் ரத்து…. என்ன காரணம்?…. முழு விவரம் இதோ…!!!!

பாகிஸ்தானின் தலைநகரில் சவுதி அரசாங்கம் தலைமையில் நடக்கும் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டை முன்னிட்டு அந்நாட்டிலுள்ள பல முக்கிய பகுதிகளில் செல்போன் சேவை ரத்து செய்யப்படவுள்ளது.

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் வைத்து சவுதி அரசாங்கத்தின் தலைமையில் 3 நாட்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இஸ்லாமிய அமைப்பை ஒத்துழைக்கும் நாடுகளைச் சார்ந்த வெளியுறவு மந்திரிகள் பங்கேற்றுள்ளார்கள்.

இந்த மாநாட்டை முன்னிட்டு இஸ்லாமாபாத்திலுள்ள பல முக்கிய பகுதிகளில் செல்போன் சேவையை ரத்து செய்யுமாறு அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும் அந்நாட்டின் உள்துறை மந்திரியான சேக் ரஷித் மேற்குறிப்பிட்டுள்ள விவகாரம் தொடர்புடைய இறுதி கட்ட முடிவு தற்போது வரை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |