Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட்: 236 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து…! வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி …!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி  236 ரன்களில் சுருண்டது .

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 150.4 ஓவரில்  9 விக்கெட் இழப்புக்கு 473  ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது .இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 236 ரன்களில் ஆட்டமிழந்தது .இதில் அதிகபட்சமாக டேவிட் மலான் 80   ரன்னும் , கேப்டன் ஜோ ரூட் 62 ரன்னும் குவித்தனர் .

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் , லயன் 3 விக்கெட்டும்  கைப்பற்றினர். இதன்பிறகு இங்கிலாந்து அணி ஃபாலோ ஆன் ஆனாலும் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி முடிவெடுத்தது .அதன்படி 237 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி   2-வது இன்னிங்சை தொடங்கியது. இது தொடக்க வீரரான டேவிட் வார்னர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார் . இதனால் 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் குவித்துள்ளது. இதில் மார்கஸ் ஹாரிஸ் 21 ரன்னுடனும்  , மைக்கேல் நேசர் 2 ரன்னுடனும்  எடுத்து களத்தில் உள்ளனர் .

Categories

Tech |