மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த குற்றத்திற்காக மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாங்குடி கிராமத்தில் பாண்டியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கையிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாண்டியம்மாளை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாண்டியம்மாள் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.