பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டின் போது பாரம்பரியமாக போடப்படும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் ஓமிக்ரான் தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக சாம்ப்ஸில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்தும் ஓமிக்ரான் பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்கள்.
அதோடுமட்டுமின்றி அந்நாட்டில் புத்தாண்டின் போது போடப்படும் பாரம்பரிய வானவேடிக்கை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டின் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.