Categories
தேசிய செய்திகள்

இன்று விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-48!

 ’ரிசாட் – 2பி ஆர்1’ செயற்கைக்கோளுடன் ’பி.எஸ்.எல்.வி. சி-48’ ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு ரீசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

இந்த ராக்கெட்டில் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் ஆறு செயற்கைக்கோள்கள் என மொத்தம் ஒன்பது வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் சேர்த்து அனுப்பப்படவுள்ளன. பூமியைக் கண்காணிக்க ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்துள்ளது.

இதிலுள்ள சக்திவாய்ந்த படப்பதிவுக் கருவிகள் பூமியை படமெடுத்து அனுப்பும் திறன் கொண்டது. வேளாண்மை, வனக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, எல்லைப் பாதுகாப்பு, கடலோரக் கண்காணிப்பு ஆகியவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தச் செயற்கைக்கோளானது ஐந்து ஆண்டுகள் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 628 கிலோ எடையுள்ள ரீசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள், 37 டிகிரி சாய்வில் 576 கிமீ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

Categories

Tech |