Categories
தேசிய செய்திகள்

“அடடே சூப்பர்”…. ரயில்வே தேர்வர்களுக்கு…. மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

கொரோனா காலகட்டத்தில் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு முன்பாக ரயில்வே வாரியம் பொறியியல், இயந்திரவியல், மின்சாரம், தொலைத்தொடர்பு, மருத்துவமனை, பணிமனை போன்ற பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் ஆகிய பணிகளுக்கான ரயில்வே பணியாளர் தேர்வினை அறிவித்தது. இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் சிலவற்றில் தவறுதலாக போட்டோ, கையெழுத்து இருப்பதனால் அதனை ரயில்வே வாரியம் நிராகரித்து விட்டது.

இவ்வாறு தவறாக அனுப்பிய விண்ணப்பதாரர்களுக்கு புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பை இரயில்வே வாரியம் வழங்கி உள்ளது. இதற்காக அதிகாரப்பூர்வ ரயில்வே தேர்வாணைய இணையதளங்களில் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ஒரு இணையதள இணைப்பினை வழங்க உள்ளது. அதன் மூலமாக தங்களது சரியான போட்டோ, கையெழுத்து போன்றவற்றை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் தங்களது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள ரயில்வே தேர்வாணைய இணையதளத்தில் சென்று பார்க்க வேண்டும். இந்த இணையதளத்தில் விண்ணப்பதாரர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை உள்ளிட வேண்டும்.

ஒருமுறை ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிபதற்கு தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் அனைவரும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதனால் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வமற்ற இடைத்தரகர்களை தொடர்புகொண்டு ஏமாற்றமடைய தேவையில்லை. மேலும் ரயில்வே தேர்வு தொடர்பான அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ ரயில்வே தேர்வாணைய இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும். அதனால் சமூக வலைதளங்களில் வரும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

Categories

Tech |