Categories
உலக செய்திகள்

FLASH NEWS : விளையாட்டு விபரீதமாக முடிந்த சோகம்…. பள்ளியில் 5 குழந்தைகள் பலி…. பிரதமர் ஆழ்ந்த இரங்கல்….!!!!

ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் விளையாட்டு நிகழ்ச்சியின் போது ஐந்து குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் டெவன்போர்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள ஹில்ரெட்ஸ் தொடக்கப்பள்ளியில் நேற்று பரபரப்பாக விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. அதில் பலூன் மூலம் வீடு போன்ற அமைப்பு ஒன்று விளையாட்டு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடு போன்ற அமைப்பானது முற்றிலுமாக காற்று நிரப்பப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு தயார் நிலையில் இருந்தது.

அதேபோல் ஒரு பக்கம் குழந்தைகளுக்காக தண்ணீரில் விளையாடும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் தயாராக இருந்தது. அதனை தொடர்ந்து காலை 10 மணி அளவில் ஆரவாரத்துடன் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மேலும் அந்த பலூன் வீடு போன்ற அமைப்பில் குழந்தைகள் சிலர் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பலூன் வீடு அமைப்பு அதீத காற்று வீசியதால் தரை மட்டத்திலிருந்து மேலே எழும்பி பறக்க தொடங்கியது.

பின்னர் அந்த பலூன் வீடு சுமார் 10 மீட்டர் உயரத்திற்கு சென்று காற்றின் வேகம் குறைந்த பிறகு பொத்தென்று கீழே விழுந்தது. அதில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் 9 பேரும் 10 மீட்டர் உயரத்திலிருந்து தரையிலும், மரத்திலுமாக கீழே விழுந்துள்ளனர். அதில் 5 குழந்தைகள் பலூனில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலத்த காயமடைந்த நிலையில் கிடந்த 4 குழந்தைகளை மீட்புக்குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் வேறு ஏதேனும் காரணத்தால் விபத்து ஏற்பட்டுள்ளதா ?அதீத காற்று வீசியதால் பலூன் வீடு தூக்கி வீசப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஆஸ்திரேலிய பிரதமர் விளையாட்டு நிகழ்ச்சியின் போது பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.

Categories

Tech |