Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒருதலை பட்சமாக செயல்படும்…. போலீசாரை கண்டித்து…. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்….!!

ஒருதலை பட்சமாக செயல்படுக் காவல்துறையினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலுள்ள சுப்பன் தெரு சந்திப்பில் உள்ள டீக்கடையில் கடந்த 13-ஆம் தேதி இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் தேனி மாவட்ட ஆதிதிராவிட உறவின்முறை சார்பில் அல்லிநகரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

அப்போது ஒருதலைபட்சமாக செயல்படும் காவல்துறையினரை கண்டித்தும், வழக்கில் முறையாக விசாரணை நடத்தக் கோரியும் கோஷங்கள் எழுப்பப் பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |