Categories
மாநில செய்திகள்

Omicron: தமிழகத்தில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள்…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்திலும் ஒமைக்ரான் காரணமாக மேலும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாதம் ஒமைக்ரான் அலை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து புதியதாக சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |