தமிழக அரசின் முன்மாதிரி கிராம விருது வழங்குவதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கான அரசாணையை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில் விருது உருவாக்கப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் 37 கிராம ஊராட்சிகளுக்கு இந்த விருது கொடுத்து, இதற்கான விருதும், கேடயமும் தலா 7.50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் .
மாவட்ட அளவிலான விருதுகளுடன் சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன்மாதிரி கிராம விருது வழங்கி அதற்கான கேடயமும் தலா 15 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது.