பம்பை நதியின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். இம்முறை பம்பையில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இதனால் பக்தர்களின் பாதுகாப்புக்காக பம்பை ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பம்பை ஆற்றில் பக்தர்கள் புனித நீராட, தர்ப்பணம் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது .