கன்னி ராசி அன்பர்களே..!
பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள்.
கனவுகள் பலிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நிலுவைப்பணம் இன்று வசூலாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும்.
தேவையற்ற மனக் கவலையை விட்டுவிடுங்கள். வழக்கு விவகாரங்களில் தாமதபோக்கு காணப்படுகிறது. பயணங்கள் ஓரளவு நல்லபலனைக் கொடுக்கும். எடுத்த முடிவில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உள்ளது. பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு மற்றும் மஞ்சள் நிறம்.