மதுபோதையில் சிலர் நாயை கொன்று ஆட்டோவில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமநகர் கூனி பஜார் பகுதியில் 5 வாலிபர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மதுபோதையில் தெரு நாயை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு அந்த நாயை ஒரு ஆட்டோவில் கட்டி சாலையில் இழுத்து சென்றனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பிளூ கிராஸ் அமைப்பின் துணைத் தலைவர் ராகவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பீமநகர் கூனி பஜார் பகுதியில் வசிக்கும் வீரமணி மற்றும் ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் நாயை கொன்று இழுத்து சென்றது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரு நாய் கடித்தால் வீரமணி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ரேபிஸ் நோய் தாக்கி விடக்கூடாது என்பதற்காக 40 நாட்கள் கண்காணித்த பிறகு வீரமணியை கைது செய்ய உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.