Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும்.

புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இன்று எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். பிரச்சனைகளில் தீர்வு காண்பீர்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே வெளிப்படுத்த வேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் இளம்பச்சை நிறம்.

Categories

Tech |