Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. நாட்டில் 3வது அலை உறுதி…. நிபுணர் குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சென்ற ஆண்டு கண்டறியப்பட்டாலும், நடப்பு ஆண்டின் ஆரம்பத்திலிருந்து பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. இதற்கு டெல்டா வகை காரணம் என்று கூறப்பட்டது. இதனால் 2-வது அலை நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து டெல்டா பிளஸ் உள்ளிட்ட கொரோனா வகைகள் கண்டறியப்பட்டாலும் கூட பெரிய அளவில் தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. சமீப நாட்களாக நாடு முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருகின்ற நிலையில், கொரோனா தொற்றின் 3-வது அலைக்கு சாத்தியம் இருப்பதாக நிபுணர் கூறியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி தேசிய கொரோனா சூப்பர்மாடல் குழுவின் தலைவர் வித்யாசாகர் பேசுகையில், இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 3-வது அலை ஏற்படலாம். தற்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் மக்களிடம் இருக்கிறது. அதனால் 2-வது அலையை விட இந்த அலை லேசாகவே பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் நாட்டில் 3-வது அலை கட்டாயம் ஏற்படும். ஒரு நாளைக்கு 7,500 கொரோனா பாதிப்புகள் தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றன. டெல்டாவுக்கு பதிலாக அந்த இடத்திற்கு வரும் போது இந்த எண்ணிக்கை உயர போவது உறுதி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |