Categories
உலக செய்திகள்

அடபாவத்த..! திருடிய லாட்டரிக்கு பணம் தாங்க…. குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்….!!

லண்டனில் திருடிய லாட்டரி சீட்டுக்கு விழுந்த 4 மில்லியன் பவுண்ட்ஸ் தொகையை camelot எனும் நிறுவனத்திடமிருந்து பெற முயன்ற இருவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

லண்டனில் மார்க் மற்றும் ஜான் ரோஸ் என்ற இரு நண்பர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லாட்டரி சீட்டு ஒன்றை களவாடியுள்ளார்கள். அந்த திருடிய லாட்டரி சீட்டுக்கு 4 மில்லியன் பவுண்ட்ஸ்கள் பரிசாக விழுந்துள்ளது.

இந்த பரிசு தொகையை மேல் குறிப்பிட்டுள்ள இரு நண்பர்களும் camelot என்ற நிறுவனத்திடமிருந்து பெற முயன்றுள்ளார்கள். ஆனால் இவர்களிடம் வங்கி கணக்கை கேட்கும்போது ஜான் ரோஸ் camelot நிறுவன அதிகாரியிடம் சரிவர பதிலளிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகப்பட்ட camelot நிறுவன அதிகாரி இது தொடர்பாக போலீசிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை விசாரணை செய்த அதிகாரிகள் இருவரும் லாட்டரி சீட்டை திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் இரு நண்பர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

Categories

Tech |