இங்கிலாந்தில் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கொரோனா பாதிப்பிலிருந்து 39% விடுபடக்கூடிய மொல்னுபிரவர் என்னும் மாத்திரை பயன்பாட்டிற்கு வரும் என்று அந்நாட்டின் வைரஸ் தடுப்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் அடுத்தாண்டின் மார்ச் மாதத்திற்குள் கொரோனா பாதிப்பிலிருந்து 39 சதவீதம் வரை விடுபடக்கூடிய மொல்னுபிரவர் என்னும் மாத்திரை பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நாட்டின் வைரஸ் தடுப்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார். இந்த கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை ரிட்ஜ்பாக் மற்றும் மெர்க் பையோதெரபியூடிக்ஸ் என்னும் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும் மேல் குறிப்பிட்டுள்ள மொல்னுபிரவர் என்னும் கொரோனாவுக்கு எதிரான மாத்திரைக்கு இங்கிலாந்தில் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கும் பாக்ஸ்லோவிட் என்னும் மாத்திரை 89 சதவீதம் வரை தொற்றுக்கு எதிராக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.