Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அஞ்சல் துறை PPF திட்டம்…. குறைந்த முதலீட்டில் கொட்டும் வருமானம்…. முழு விவரம் இதோ….!!!!

இந்தியாவில் அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்குகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஞ்சலகங்கள் வங்கிகளைப் போன்று பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அஞ்சல் நிலையங்களில் மக்கள் பயன் பெறும் வகையில் சிறந்த சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. வைப்பு நிதி, தொடர் வைப்பு கணக்கு, கால வைப்பு கணக்கு, முதியோருக்கான சேமிப்பு திட்டம் மாதாந்திர வருமானம் என்று அஞ்சலகங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது.

மேலும் ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறான விதிமுறைகளும், வட்டி விகிதங்களில் இருக்கிறது. சிறு சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி தொகை அவர்களின் அஞ்சல் கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் பிபிஎஃப் திட்டம் சிறந்த முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது. திட்டத்தில் 417 ரூபாய் தினமும் சேமித்து முதலீடு செய்வதன் மூலம் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்யலாம். அவற்றின்படி வருடத்திற்கு 1.50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். மேலும் இதில் 7.1% வருடாந்திர வட்டி அளிக்கப்படுகிறது. 15 வருடங்களுக்கு முதிர்வு தொகையாக மொத்தம் ரூபாய் 40.68 லட்சம் கணக்குதாரருக்கு கிடைக்கும்.

ஆனால் வட்டி விகிதம் வரும்போது முதிர்வு தொகை மாற்றமடையும். 15 ஆண்டு நிறைவடைந்த பின்னர் முதலீட்டு காலத்தை 5 +5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் உங்கள் மொத்த கார்ப்பஸ் ரூபாய் 1.3 கோடியாக இருக்கும். இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக வருமான வரிச்சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகைகள் வழங்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வதில் முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது.

Categories

Tech |