Categories
தேசிய செய்திகள்

”கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்” தீ வைத்துக்கொண்ட சிறுமி ….!!

கர்ப்பமாக்கிய காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், மன உளைச்சலுக்குள்ளான சிறுமி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம் பேத்தியாவைச் சேர்ந்த 19 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்துள்ளார். சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய அந்த இளைஞர் பலமுறை அவருடன் உறவில் இருந்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமாகவே, அதை அந்த இளைஞரிடம் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், திருமணம் செய்துகொள்ள அந்த இளைஞர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், தன்னுடைய நிலையை தன் பெற்றோரிடம் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்குள்ளான அச்சிறுமி, இன்று தனக்குத் தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 70 விழுக்காடு தீக்காயங்களுடன் இருக்கும் சிறுமிக்குத் தற்போது தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான இளைஞர் தலைமறைவாகியுள்ளதால், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

Categories

Tech |