பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய 50 குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை அலுவலர்கள் குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 1,447 பள்ளிகளை ஆய்வு செய்ய 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் டிச.22-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.