ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அனுமதி வழங்கி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் “தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மீதி உள்ள 28 பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இதில் 4 பேர் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.
மீதி 24 பேர் மற்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இனி அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் பரிசோதனை கட்டாயமாக்கப் வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஒமைக்ரான் பரவலை கட்டுபடுத்த முடியும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் வீட்டில் அல்லது அரச அமைந்துள்ள மையங்களில் கட்டாயம் ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பதோடு, எட்டாவது நாளில் பரிசோதனை மேற்கொள்ளும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என பொது சுகாதாரத்துறை இயக்குனர் வலியுறுத்தியுள்ளார்.