தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்க்ளுக்கும், நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோரில் அறிகுறி இருப்போரை பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும். மாநிலத்துக்குள்ளும் மருத்துவ கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒமைக்ரான் அச்சம் காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்படுமா? என்ற கேள்வி எழும்பி வருகிறது.இதற்கு பதிலளித்த அமைச்சர் சுப்பிரமணியன், மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து, வெளிநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.