Categories
மாநில செய்திகள்

மக்களே…! “வரும் நாட்களில் அதிகரிக்க குளிர் இருக்கும்”…. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வரும் நாட்களில் அதிக குளிர் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: ” தமிழகத்தில் வரும் நான்கு நாட்களுக்கு வெப்பநிலை குறைந்து குளிர் அதிகரிக்கும். வரும் 22ஆம் தேதி வரை உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட ஒன்று முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலையே நிலவும். இன்றும், நாளையும் குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்

Categories

Tech |