Categories
மாநில செய்திகள்

உங்களோட சொந்த செலவில்…. சாலைகளை சரி பண்ணுங்க…. அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு…!!!!!

கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சியில் சரியாக அமைக்கப்படாத சாலைகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அவருடைய சொந்த செலவில் செப்பனிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த முருகேஷ் என்பவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது கடந்த 2017ம் வருடம் டிசம்பர் 6ம் தேதி தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் பசுமைவழிச் சாலை கேசவ பெருமாள் பிரதான சாலை சீரமைக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த நடுவம், சாலையை சீரமைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது .

இதுகுறித்த தகவலை கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் முருகேஷ் அளித்த மனு பொது தகவல் அதிகாரி பதில் அளிக்காததால் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி தமிழக மாநில தகவல் ஆணையத்தில் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த மாநில தகவல் ஆணையர் சு. முத்துராஜ், மனுதாரர் புகார் அளித்த நாளில் இருந்து மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வீதம் 27 ஆயிரம் ரூபாய் மனுதாரருக்கு இழப்பீடு வழங்க தகவல் அதிகாரிக்கு உத்தரவிட்டா.ர் மேலும் முறையாக அமைக்கப்படாத சாலைகளை ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்தக்காரர்கள் சொந்த செலவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |