Categories
தேசிய செய்திகள் பல்சுவை

”அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது” ப.சிதம்பரம்  விமர்சனம் ….!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

இது குறித்து சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. அரசியலைப்புக்கு எதிரான இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. உச்ச நீதிமன்றம் போராட்ட களமாக மாறியுள்ளது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தங்கள் கடமையை செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணியை செய்ய தவறிவிட்டனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |