Categories
தேசிய செய்திகள்

”குறுகிய மனம், வெறுப்புணர்வை இந்தியா நேசிக்கிறது” பிரியங்கா காந்தி விமர்சனம் …!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதன் மூலம் குறுகிய மனம், வெறுப்புணர்வு ஆகியவற்றையே இந்தியா நேசித்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி, “நேற்று இரவு மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதன் மூலம் குறுகிய மனம், வெறுப்புணர்வு ஆகியவற்றையே இந்தியா நேசித்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. சுதந்திரத்திற்காக தலைவர்கள் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தனர். சமத்துவம், மத சுதந்திரம் ஆகியவை அந்தச் சுதந்திரத்தில் பேணப்பட்டது” எனப் பதிவிட்டிருந்தார்.

Categories

Tech |