மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கணபதிபுரம் பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சொந்த ஊருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் விசுவாசபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த வேன் அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகவள்ளி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.