Categories
மாநில செய்திகள்

₹3,000 உதவித்தொகை….  தமிழக அரசு அதிரடி…. உடனே போங்க….!!!

3 ஆண்டு காலம் நடைபெறும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இந்த உதவித்தொகையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 291 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் திருமுறைகளை குறைவின்றி ஓதுவதற்கு ஏதுவாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி நடைபெற்று வருகின்றது. இந்த பயிற்சி பள்ளியில் மூன்று ஆண்டு கால சான்றிதழ் படிப்பு அளிக்கப்படுகின்றது.

கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்த பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வில்லை. திமுக ஆட்சி ஏற்ற பிறகு இந்த பள்ளியில் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த மாணவர்களுக்கு கடந்த காலங்களில் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு 3000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மேலும் சென்னையில் வரும் 21ஆம் தேதி 3000 உதவி தொகையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |