Categories
மாநில செய்திகள்

இன்று காலை 10 மணி முதல் மாணவர்களுக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…. ரெடியா இருங்க….!!!

இளநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,925 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன.  இந்தப் படிப்பில் சேருவதற்கு இன்று காலை 10 மணி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று தொடங்கி வரும் ஜனவரி 7ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 10ம் தேதி மாலை 5 மணி என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது “ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார். அவர் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரியை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதன் மூலமாக 1, 450 இடங்கள் தமிழகத்திற்கு கிடைக்கும். நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் எனப்படும் தேர்வு நடைபெற்றுவருகின்றது. நடப்பாண்டில் பொறுத்தவரையில் செப்டம்பர் 12ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வன்னியர்கள் மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த தீர்ப்புக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதால் கலந்தாய்வு நடத்துவதற்கு கால தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் ஆன்லைன் வாயிலாக மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் https://ugregtnmedicalonline.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |