கனடாவில் மாதவிடாய் பிரச்சனை காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பிரசவம் என்பது மிக முக்கிய தருணம் ஆகும். மேலும் பெண்கள் கரு உருவாகி குழந்தை பெறுவது வரை பல அபாய கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் கனடாவை சேர்ந்த பெண் ( வயது 33 ) ஒருவர் மாதவிடாய் சமயத்தில் தனக்கு அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்படுவதாக கூறி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
என்ன நடந்தது..?
அதாவது அந்த பெண்ணை பரிசோதித்து பார்த்த போது அவருடைய கல்லீரலில் கரு ( குழந்தை ) வளர்ந்து வருவதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இவ்வாறு கல்லீரலில் கரு வளர்வதை இடம் மாறிய கர்ப்பம் என்றும் சொல்லலாம். அதாவது கருப்பையில் கருமுட்டை வளராமல் வேறு இடத்திற்கு மாறுதல் அடைவதே இந்த மாதிரியான கர்ப்பத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் 1964-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகிலேயே சுமார் 14 பேருக்கு மட்டுமே இது போன்று கல்லீரலில் கரு வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.
அதாவது குழந்தை கல்லீரலில் வளர்வது என்பது அரிதான ஒரு நிகழ்வாகும். அதேபோல் சில நேரங்களில் பெண்களுக்கு வயிற்று பகுதியில் கூட கரு வளர்வதை பார்த்துள்ளோம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் எனது அனுபவத்தில் இப்போது தான் முதன் முறையாக கல்லீரலில் கரு வளர்வதை பார்க்கிறேன் என்று அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உயிர் தான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அவருடைய கல்லீரலில் இருந்த கருவை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர்.