இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 140 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 24 மணி நேரத்தில் 4 மாநிலங்களில் 30 புதிய ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த 569 தினங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக இருந்தது. இதனையடுத்து புதிதாக 7,145 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 289 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஒமிக்ரன் வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவது சுகாதார அதிகாரிகள் மத்தியில் கவலைக்குரியதாக இருக்கிறது. பிப்ரவரி மாதம் ஒமிக்ரான் உச்சத்தை அடையும் என்றும் அதனால் கொரோனாவின் 3-வது அலை உருவாகும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஒமிக்ரான் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள், அவசர சிகிச்சைப் பிரிவுகள், சுவாசக் கருவிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.