Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. புதிய கட்டுப்பாடுகள் உடனடி அமல்…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மராட்டியத்தில் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரசால் மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தலைநகர் மும்பையில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொதுமக்கள் பொது இடங்களில் கூடும் போது தொற்று வேகமாக பரவலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இதன் காரணமாக 3-வது கொரோனா அலை ஏற்படும் அபாயமும் உள்ளது.

ஆகவே மும்பை மாநகராட்சி பல்வேறு அறிவுறுத்தல்கள், கட்டுபாடுகளை விதித்து இருக்கிறது. இது தொடரபாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா தடுப்பு விதி மீறல்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வார்டு அளவில் குழு அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இக்குழுவினர் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து கடந்த மாதம் 27-ந் தேதி மாநில அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள், கடந்த 14-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தொடர்பாக மும்பை காவல்துறையினர் வெளியிட்ட உத்தரவுகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மேலும் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு மாநகராட்சி பிறப்பித்துள்ள கட்டுபாடுகளான, “உள் அரங்குகளில் நடக்கும் நிகழச்ச்களில் 50 சதவீதம் பேர் மட்டும் பங்கேற்கலாம். இதனிடையில் திறந்தவெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மொத்த கொள்ளவில் 25 சதவீதம் நபர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம்.
இதனை மீறி 1,000 பேருக்கு அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஓட்டல்கள், உணவகங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார், அரசு நிறுவனங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். பொது இடங்கள், பொது போக்குவரத்தில் பயணம் மேற்கொள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் ஆகும்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது. இதேபோன்று கிறிஸ்துமஸ், புத்தாண்டு விருந்து நிகழ்ச்சிகளை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு மாநகராட்சி கமிஷனரான இக்பால் சகால் கேட்டு கொண்டுள்ளார். சமூகத்தில் தாக்கத்தை உருவாக்ககூடிய பிரபலங்கள், புகழ் பெற்றவர்கள் தற்போது நிலவும் சூழல் பற்றி தெரிந்து கவனமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Categories

Tech |