பெண் கேட்டு தகராறு செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் கூலித் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உறவினரான சந்தீப் குமார் என்பவரது வீட்டிற்கு சென்று “உனது மகளை எனக்குத் திருமணம் செய்து வை” என மணிகண்டன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த மணிகண்டன் சந்தீப் குமாரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சந்தீப் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.