கனடா நாட்டில் ஆண்டுதோறும் ஆண்டின் சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்குவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்தாண்டிற்கான சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன.
இதில் ஆச்சரியமூட்டும் விதத்தில், யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியனும் கனடா நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான பியாங்கா ஆண்ட்ரியாசுவை இந்த ஆண்டு சிறந்த தடகள வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் டென்னிஸ் விளையாட்டைச் சேர்ந்த ஒரு வீராங்கனைக்கு இந்தாண்டின் சிறந்த தடகள வீராங்கனை விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இவர் இந்தாண்டு நடைபெற்ற யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்றார்.
Our singles grand slam champion has now been named Canada’s athlete of the year!
🇨🇦Bianca Andreescu has been won the Lou Marsh Award for 2019.
Congrats, @Bandreescu_! pic.twitter.com/mnCv4vMDRT
— Match Point Canada (@MatchPointCAN) December 9, 2019