கரடிகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சின்ன உபதலை கிராமத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் 2 கரடிகள் நுழைந்துவிட்டது.
இந்த கரடிகள் அங்குள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து தின்பதற்கு உணவுப்பொருட்கள் இருக்கிறதா என தேடி பார்த்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் அலறி சத்தம் போட்டதால் கரடிகள் வீட்டை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அடுத்து இரவு நேரத்தில் அட்டகாசம் செய்யும் கரடிகளை பிடிப்பதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.