தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா காவல்துறையினர் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரித்ததில் இருவரும் குனிச்சி பகுதியில் வசிக்கும் மாது மற்றும் மனோஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இம்மாவட்ட மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக அவர்கள் இருவரும் கூறியுள்ளனர்.
பின்னர் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 30 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனர்.