Categories
உலக செய்திகள்

OMIKRAN: ஒன்றரை முதல் 3 நாட்களில்…. WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஒன்றரை முதல் 3 நாட்களில் இருமடங்காக அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது வரை 89 நாடுகளில் கால் பதித்து விட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியுள்ள நாடுகளில் ஒன்றரை முதல் 3 நாட்களில் அந்த வைரஸின் பாதிப்பு இருமடங்காக அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரசை விட மிகவும் வேகமாக பரவக்கூடிய தன்மை உடையது ஆகும். மேலும் தென் ஆப்பிரிக்கா, பிரிட்டனில் ஒமிக்ரான் வைரசால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |