Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! எருமை மாடு 80,00,000 ரூபாயா…. உற்சாகத்துடன் செல்பி எடுத்த மக்கள்…. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் ஒரு எருமை மாடு 80,00,000 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துயுள்ளது. இந்த எருமை மாடு ஒன்றரை டன் எடை கொண்டது. மேலும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் கஜேந்திரா என்ற பெருமையுடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து வருகின்றனர்.

இதையடுத்து எருமை மாட்டின் எடையை பராமரிப்பதற்காக இந்த மாடு தினம்தோறும் 15 லிட்டர் பால் குடிப்பதாகவும், 4 வேளையும் கரும்பு மற்றும் பொருட்களை உணவாக உட்கொள்ளும் என்றும் அந்த மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த வகை மாடுகள் இனப்பெருக்கத்திற்கு பெரிதும் உதவும் என்பதால், எருமை மாட்டை பல லட்சங்கள் கொடுத்து வாங்குவதற்கு விவசாயிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றனர்.

Categories

Tech |