Categories
தேனி மாவட்ட செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இனி…. இந்த வழியில் செல்ல முடியாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை தொடங்கியுள்ளதையடுத்து, ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டத்தின் வழியாக தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். இதனால் குமுளி மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக நாளை முதல் பக்தர்கள் போக்குவரத்தில் தேனி மாவட்ட காவல்துறை மாற்றம் செய்து ஆணையிட்டுள்ளது. அதன்படி, தேனியில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கம்பம் மெட்டு, ஆனையார், புளியமலை, கட்டப்பனண, குட்டிக்கானம், முன்டகாயம், எரிமேலி மற்றும் பம்பை வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டும்.

மேலும் ஐயப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் பக்தர்கள் குட்டிக்கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப் பெரியாறு, குமுளி, கூடலூர், கம்பம், உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் வழியாக தேனி வரவேண்டும். மேல் குறிப்பிட்ட போக்குவரத்து வழித்தடம் மாற்றத்தினை ஒழுங்குபடுத்தும் பொருட்டும், பக்தர்கள் வாகனங்களுக்கு வழித்தடம் மற்றும் தகவல் தெரிவிப்பதற்காக முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Categories

Tech |