Categories
மதுரை மாவட்ட செய்திகள்

படியில் பயணம் செய்யக்கூடாது… மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… அமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

பேருந்து படிகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துதுறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை  மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் சென்னை செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பேருந்துகளின் படிகளில் நின்று பயணிக்கும் மாணவர்கள் குறித்து இணையதளங்களில் வீடியோ வருவதாகவும்,  இதனைதடுக்க  காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அவர்  கூறினார்.

மேலும் படிக்கட்டில்  பயணம் செய்யும்  மாணவர்கள் பற்றிய விவரங்களை அளித்தால் அவர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  அவர்  கூறினார். இந்நிலையில்  தமிழகத்தில் பெண்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளில் ஒரு நாளைக்கு சுமார் 35 லட்சம் பயணிகள் பயணம் செய்வதாகவும், கேரளா மற்றும் புதுச்சேரியை  ஒப்பிடும்போது தமிழகத்தில் 20 லட்சம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதோடு  பெண்களுக்கு என்று தனி நிறத்தில் பேருந்துகள் இயக்குவது குறித்து முதல் அமைச்சருடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும்  கூறினார்.

Categories

Tech |