உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. 19ஆம் தேதியான இன்று தேரோட்டம் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது.
இதை தொடர்ந்து நாளை 20-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது .இதனால் கடலூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம், கிழக்கரை வட்டம், உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாவட்டங்களிலும் நாளை விடுக்கப்படும் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.