Categories
மாநில செய்திகள்

விஜய் கட்டும் புதிய பள்ளி….? இது உண்மையா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னை அருகே திருப்போரூரில் நடிகர் விஜய் பள்ளிக்கூடம் கட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. தந்தை இயக்குனராக இருந்தாலும் தனது விடா முயற்சியின் காரணமாக இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பவர் தளபதிவிஜய். இந்த சூழலில் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னையை அடுத்த திருப்போரூரில் நடிகர் விஜய் ஒரு பள்ளிக்கூடம் கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப்பற்றி நடிகர் தரப்பில் விசாரித்தபோது பள்ளிக்கூடம் கட்டுவது விஜய் அல்ல என்பதும், அவருடைய உறவினர் பிரிட்டோ என்பதும் தெரியவந்துள்ளது.

இவர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளார். அவருக்கு சொந்தமாக ஏற்கனவே ஒரு கல்லூரியும், பள்ளிக்கூடமும் உள்ளது. திருப்போரூரில் தற்போது கட்டி வருவது இரண்டாவது பள்ளிக்கூடம். இந்த பள்ளிக்கூட கட்டுமான பணிகளை அவர் சமீபத்தில் சுற்றிப்பார்த்தார். இதைப் பார்த்த பலரும் விஜய்தான் பள்ளிக்கூடம் கட்டி வருவதாக வதந்தியை பரப்பி விட்டார்கள் என்று தெரிவித்துள்ளன.

Categories

Tech |