Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளிகளில் நடத்திய ஆய்வு…. பழுதடைந்த 80க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்…. அதிகாரிகள் தகவல்….!!

பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் விரைவில் நீக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் அமைக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களை கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி, பொதுபணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை 74 பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்த நிலையில் 44 பள்ளி கட்டிடங்கள், 23 சமையல் கட்டிடங்கள், 5 பள்ளி கழிவறைகள், 2 நீர்தேக்க தொட்டிகள், ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ஒரு ஆசிரியர் குடியிருப்பு கட்டிடம், காதி கிராப்ட் கட்டிடம் உள்பட மொத்தம் 80 கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து பழுதடைந்த கட்டிடங்களுக்குள் மாணவ மாணவிகள் செல்லாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த கட்டிடங்கள் விரைவில் அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் தனியார் பள்ளிகளிலும் இருந்த சிறு பழுதுகள் சரி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |