தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் தற்போது உரையாற்றி வருகிறார். அதில், “அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான். அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆங்கிலத்தில் Do Or Die என்ற ஒரு பழமொழி உண்டு.
என்னை பொருத்தவரை அதை Do And Die என்று எடுத்துக்கொள்வேன். செய்துவிட்டு செத்துமடி என்று சொல்வேன் என்ற உணர்வோடு தான் நான் என்னுடைய கடமையை ஆற்றி கொண்டிருக்கிறேன் என்று பேசியுள்ளார்.