கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட்டு வந்தது. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. இந்த நிலையில் பாதிப்பு சற்று குறைந்து உள்ளதால் மீண்டும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் ஜனவரி 21 முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரியர் மாணவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெறும். நவம்பர்- டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த தேர்வு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளில் எளிமையான வினாக்கள் கேட்கப்படுமா? என்று கேள்வி எழுந்த நிலையில், செமஸ்டர் தேர்வுகளில் எளிமையான வினாக்கள் என்று அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் உறுதியளித்துள்ள்ளார். பாடத்திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது. மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.