பரினா தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் ”பாரதி கண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் சில காரணங்களால் விலகினார்.
இதனையடுத்து, இந்த சீரியலில் வெண்பா என்னும் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரினா. சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பிறந்து சில நாட்களே ஆன தனது மகனின் போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரினா வெளியிட்டுள்ளார். இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CXpehwIFvyd/?utm_source=ig_embed&ig_rid=a73ba81e-d539-4f41-8b4f-2bd05cbecc98